search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிடெக்னிக் கல்லூரி"

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தியூர் உறுப்பினர் வெங்கடாசலம் கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.

    கோவை:

    கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டி ற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானி க்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புரோடக்ஷன் என்ஜினீயரிங், இ.சி.ஜி டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதற்கு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் சேர பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர பட்டய சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ 2 வருடம் இருக்க வேண்டும். இது 4 ஆண்டு படிப்பாகும்.

    இந்த படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.150, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் விண்ணப் பணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 8-ந் தேதி கடை நாளாகும்.

    மேலும், கோவை பீளமேடு அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் பிரிவு தமிழ் வழியில் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.சி. ஜி டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் உள்ளன.

    இவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும். தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.2,500க்கு கீழ் இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தெரிவித்தார்.

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கொருக்கை அரசு பாலிடெக்னிக்கில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரமோகன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மரம் நட்டு தொடங்கி வைத்தார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

    சென்னை அன்னை பழமுதிர்ச்சோலை நிறுவனர் முனைவர் அரிமா.ரவிச்சந்திரன், கொறுக்கை ஊராட்சி மன்றத் தலைவர்ஜானகிராமன், கல்லூரி கண்காணிப்பாளர் குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து மரம் நட்டனர்.

    கொறுக்கை பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி , மன்ற உறுப்பினர் கலாவிஜேந்திரன் மற்றும் கல்லூரியை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும், கொறுக்கை வாழ் மக்கள் 72 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

    ×